/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரபு வழிக் கால்நடை வளர்ப்பு கருத்தரங்கம்: இன்று நடக்கிறது
/
மரபு வழிக் கால்நடை வளர்ப்பு கருத்தரங்கம்: இன்று நடக்கிறது
மரபு வழிக் கால்நடை வளர்ப்பு கருத்தரங்கம்: இன்று நடக்கிறது
மரபு வழிக் கால்நடை வளர்ப்பு கருத்தரங்கம்: இன்று நடக்கிறது
ADDED : ஜன 24, 2025 10:19 PM
- நமது நிருபர் -
அவிநாசி, சேவூர் ரோடு, கொங்கு கலையரங்கில், இன்று மரபு வழிக் கால்நடை வளர்ப்பு தொடர்பான கருத்தரங்கம் நடக்கிறது.
தற்போதைய சூழலில் விவசாயம், கால்நடை வளர்ப்பு என்பது, பெரும் பொருட் செலவை ஏற்படுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆடு, மாடு மற்றும் கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீப ஆண்டுகளாக, கால்நடைகளை தாக்கும் பல்வேறு நோய்கள் மற்றும் பராமரிப்பில் உள்ள சிக்கல்களால் கால்நடை வளர்ப்பு குறைந்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மாடுகளுக்கு ஏற்படும் மடிநோய், சினை பிடிக்காமல் இருப்பது, அம்மை நோய், கோழிகளை தாக்கும் வெள்ளை கழிச்சல், ஆடுகளுக்கு ஏற்படும் கொள்ளை நோய், கழிச்சல் நோய் போன்றவற்றில் இருந்து அவற்றை பாதுகாக்க திணறுகின்றனர்.
பண்டைய காலங்களில் கால்நடை வளர்ப்பு என்பது, பெரியளவில் இருந்தது. விவசாய கல்வி, தொழில் நுட்பம் மற்றும் கால்நடை மருத்துவம் வளராத அக்காலத்தில் கூட, விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் இருந்து கிடைக்கும் இயற்கை மற்றும் மூலிகை பொருட்களை கொண்டே கால்நடைகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்தி, கால்நடை வளர்ப்பில் சிறப்பாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த மரபு வழி கால்நடை வளர்ப்பு குறித்து அறிந்து, அதை செயல்படுத்துவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளனர்.
அவிநாசி, சேவூர் ரோடு, கொங்கு கலையரங்கில், இன்று (25ம் தேதி) காலை, 9:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை மரபு வழிக் கால்நடை வளர்ப்பு தொடர்பான கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு கால்நடை பல்கலை ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் புண்ணியமூர்த்தி பேசுகிறார்.
வனத்துக்குள் திருப்பூர், அவிநாசி கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.