தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாரம்பரிய வெஜிடெபிள் பிரியாணி

 பாரம்பரிய வெஜிடெபிள் பிரியாணி

 பாரம்பரிய வெஜிடெபிள் பிரியாணி


ADDED : ஆக 30, 2026 03:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 03:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செய்முறை:

ஒரு வாணலியில் அரிசி மற்றும் அதற்கு ஏற்ற அளவு தண்ணீர், உப்பு, பிரிஞ்சி இலை, கிராம்பு, லவங்கம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும்.

ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்க்கவும். நெய் சூடானதும் அதில் சிட்டிகை பெருங்காயம், சீரகம், இஞ்சி பூண்டு விழுது மற்றும் வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்க தொடங்கியதும் அதில் ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலைகளைச் சேர்க்கவும். பிறகு அதில் காலிபிளவர், கேரட், பீன்ஸ் சேர்த்து 2-3 நிமிடங்கள் சமைக்கவும். பின்பு சிறிது உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். இப்போது தக்காளி விழுது சேர்த்து நன்கு கலக்கவும். வேறு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் வதக்கி வைத்துள்ள காய்கறி கலவையை சேர்த்து அதன் மீது ஒரு அடுக்கு அரிசி சேர்க்கவும்.

இதே போல் காய்கறி மற்றும் அரிசியை இரண்டு அடுக்காக சேர்த்து கொள்ளவும். பின்பு அதன் மேல் வறுத்த வெங்காயம், புதினா மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும். இதை 5 நிமிடம் அடுப்பில் தீயை குறைத்து வைத்து இறக்கினால் சுவையான வெஜிடெபிள் பிரியாணி ரெடி!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us