UPDATED : அக் 11, 2026 12:08 AM
ADDED : அக் 11, 2026 12:06 AM

அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் நாடுகாணி அருகே, கோழிக்கோடு சாலையில் மரம் விழுந்து, தமிழகம் – - கேரளம் இடையே நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் நேற்று முன்தினம் சில பகுதிகளில் மழை பெய்தது. நாடுகாணி அருகே கோழிக்கோடு சாலையில் இரவு 10:00 மணியளவில், மரம் விழுந்து மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. தமிழகம், கேரளம் -இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலுார் தீயணைப்பு துறை வீரர்கள், மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். நள்ளிரவில், 2:00 மணிக்கு போக்குவரத்து சீரானது. நேற்று காலை, நெடுஞ்சாலை துறையினர் மரத்தை அகற்றினர். சாலையில் சேதமடைந்த மின்கம்பிகளை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர்.
