/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறையில் போக்குவரத்து நெரிசல்; விடுமுறையில் திரண்ட சுற்றுலா பயணியர்

ADDED : ஆக 17, 2025 09:54 PM

வால்பாறை; தொடர்விடுமுறையால், வால்பாறையில் சுற்றுலாபயணியர் திரண்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வால்பாறைக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியர் வந்து செல்கின்றனர். சுதந்திரதினம், வார விமுறை என தொடர் விடுமுறையால், அங்கு சுற்றுலாபயணியர் அதிக அளவில் வந்தனர்.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில், இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், அங்கு சுற்றுலாபயணியர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
ஆனால் கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றிப்பார்க்க, வந்து செல்ல இ-பாஸ் நடைமுறையில்லை என்பதால், பல்வேறு பகுதியிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியர் அங்கு திரண்டனர்.
இதனால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. ஒரே நேரத்தில் வால்பாறை நகரில் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்றதால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு, மக்கள் நடந்து செல்லக்கூட வழியில்லாமல் தவித்தனர்.
இதே கவியருவி, ஆழியாறு பகுதிலும் சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் வரத்துவங்கியதால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போலீசாரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் பல்வேறு இடங்களில் சுற்றுலா வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டது.