/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராஜாமில் ரோட்டில் போக்குவரத்து நெரிசல்; கனரக வாகனங்கள் செல்ல தடை
/
ராஜாமில் ரோட்டில் போக்குவரத்து நெரிசல்; கனரக வாகனங்கள் செல்ல தடை
ராஜாமில் ரோட்டில் போக்குவரத்து நெரிசல்; கனரக வாகனங்கள் செல்ல தடை
ராஜாமில் ரோட்டில் போக்குவரத்து நெரிசல்; கனரக வாகனங்கள் செல்ல தடை
ADDED : நவ 21, 2025 06:12 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில் வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன. மேலும், இந்த ரோடு போக்குவரத்து மிகுந்து காணப்படுவதுடன், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது.இந்த ரோட்டில், கனரக வாகனங்கள் செல்வதால் அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கனரக வாகனங்கள் செல்வதால் நெரிசல் ஏற்படுவதை தடுக்க, போக்குவரத்து போலீசார், தடுப்புகள் அமைத்து, இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்ல அறிவிப்பு பலகை வைத்தனர்.
ஆனால், மார்க்கெட் ரோட்டில் இருந்து வரும் கனரக வாகனங்கள் ராஜாமில் ரோடு வழியாகவே சென்று வந்தன. நிரந்தர தடை விதிக்க வேண்டுமென போக்குவரத்து போலீசார், நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதன்படி, தற்போது, ராஜாமில் ரோட்டில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ரோட்டின் இருபுறமும் கனரக வாகனங்கள் செல்லாத வகையில், நகராட்சி வாயிலாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
ராஜாமில் ரோட்டில் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ள நிலையில் சாலை குறுகலாக உள்ளது. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் அத்துமீறி செல்வதை தடுக்க ரோட்டின் இருபுறத்திலும் நுழைவுவாயிலில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

