/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வழியாக மதுரையில் இருந்து முசாபர்பூருக்கு ரயில்
/
கோவை வழியாக மதுரையில் இருந்து முசாபர்பூருக்கு ரயில்
கோவை வழியாக மதுரையில் இருந்து முசாபர்பூருக்கு ரயில்
கோவை வழியாக மதுரையில் இருந்து முசாபர்பூருக்கு ரயில்
ADDED : ஆக 14, 2024 09:28 PM

கோவை : கோவை வழியாக மதுரையில் இருந்து பீகார், முசாபர்பூருக்கு ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு:
மதுரை - முசாபர்பூர்(வண்டி எண்:06114) சிறப்பு ரயில், மதுரையில் இருந்து வரும், 18 ம் தேதி இரவு, 7:05 மணிக்கு புறப்பட்டு, 21ம் தேதி அதிகாலை, 2:45 மணிக்கு முசாபர்பூர் சென்றடையும்.
சிறப்பு ரயிலில் தலா, 8 படுக்கை வசதி, இரண்டாம் வகுப்பு பொது, சரக்கு பெட்டி உட்பட, 18 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை சந்திப்பு, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.