ADDED : செப் 06, 2026 03:00 PM
அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: கோவை – - நாகர்கோவில் ரயில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக இம்மாதத்தில் இயக்கப்படுகிறது.
கோவை – - நாகர்கோவில் ரயில் (16322) திருப்பூர், ஈரோடு, கரூர் வழியாக தினசரி இயங்கி வந்தது. தற்போது, கரூர், மூர்த்திபாளையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடப்பதால், இந்த ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக இம்மாதம் 8, 10, 12, 15, 17, 19, 22, 24, 26, 29 மற்றும் அக்டோபர் 1 வரை இயங்குகிறது.
இந்த ரயில், போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது. எனவே, ரயில் பயணியர் தென் மாவட்டங்களுக்கு செல்ல இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
