/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் நேரம் மாற்றம்: பெண் பயணியர் வரவேற்பு
/
ரயில் நேரம் மாற்றம்: பெண் பயணியர் வரவேற்பு
ADDED : ஜன 02, 2025 12:16 AM

கிணத்துக்கடவு; ரயில் நேரம் மாற்றப்பட்டதற்கு, கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் பாலக்காடு ரயில்வே கோட்டத்தை பாராட்டி பெண் பயணியர் கடிதம் அளித்தனர்.
அதில், இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல், பொள்ளாச்சி, கோவை, கிணத்துக்கடவு, போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் (56110 ரயில் எண்) நேரம் பொள்ளாச்சியில் காலை 8:00 மணிக்கு, கிணத்துக்கடவில், 8:25 மணிக்கு வந்து சேரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பயணியர் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும், பயணியர் வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு, நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெண் பயணியர் கூறியதாவது, 'ரயிலில் பயணிக்க காலை, 7:45 மணிக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சென்றோம். ஆனால், தற்போது கிணத்துக்கடவுக்கு, 8:25 மணிக்கு ரயில் நேரம் மாற்றப்பட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பெண்கள் வீட்டு பணிகளை முடித்து, வேலைக்கு செல்ல வசதியாக இருக்கும்,' என்றனர்.