UPDATED : ஜூன் 03, 2026 04:40 PM
ADDED : ஜூன் 03, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
கோவை: ஈரோடு-திருப்பூர் இடையேயான ரயில்வே தண்டவாளத்தில் புதுப்பித்தல் பணி நடக்கிறது.
இதனால், நாளை மற்றும் 7ம் தேதிகளில் திருச்சியில் இருந்து மதியம் 1:00க்கு புறப்பட்டு கோவை, போத்தனுார் வழியாக இரவு 8:15க்கு பாலக்காடு டவுன் அடைய வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்(16843), ஈரோடு ஸ்டேஷனில் அரை மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப்படுகிறது. பணிகள் முடிந்தவுடன் ஈரோட்டில் இருந்து பாலக்காடு டவுனிற்கு முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
