/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேனீ வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
/
தேனீ வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : அக் 21, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு தோட்டக்கலைத்துறை சார்பில், தேனீ வளர்ப்பு குறித்து கருத்தரங்கம் மற்றும் பயிற்சி நடைபெற்றன. இரண்டாவது நாள், களப்பயிற்சி, ஆனைமலை அருகே திவான்சாபுதுார் கோபாலா தேனீ பண்ணையில் நடந்தது. பண்ணை தாளாளர் விவேகானந்தன், விவசாயிகளுக்கு களப்பயிற்சி வழங்கினார்.
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், தேனீ வளர்ப்பு முறைகள், பெட்டி பராமரிப்பு, தேன் பிரித்தெடுக்கும் முறைகள், தேன் அரக்கில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் விதம் மற்றும் விற்பனை குறித்து விளக்கப்பட்டது. தோட்டக்கலை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.