/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
/
ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : நவ 05, 2025 09:52 PM
மேட்டுப்பாளையம்: தமிழக அரசு வேளாண்மை துறை, காரமடை வட்டார அட்மா திட்டத்தின் சார்பாக ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து காரமடையில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
காரமடை வேளாண்மை உதவி இயக்குனர் பாக்யலட்சுமி தலைமை வகித்து, இதன் முக்கியத்துவம் மற்றும் முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் பற்றியும் எடுத்துக் கூறினார். தொடர்ந்து, காரமடை வட்டார உதவி வேளாண்மை அலுவலர் சிவராஜ் மற்றும் அசாருதீன், மண்புழு உரம் தயாரிப்பு படுகை எப்படி தயார் செய்வது எனவும் மண்புழு உரம் உற்பத்தி செய்வது எப்படி என்றும் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். காரமடை வட்டார துணை வேளாண்மை அலுவலர் நாராயணசாமி பேசுகையில், ஒருங்கிணைந்த பண்ணையத்தின் வாயிலாக கறவை மாடுகள், ஆடுகள் மற்றும் பழ பயிர்கள் ஆகியவற்றை ஒரே பண்ணையில் வளர்த்து அதிக லாபம் பெற முடியும், என்றார்.
இந்த நிகழ்வில், காரமடை வட்டார கால்நடை மருத்துவர் விமலா தேவி, காரமடை தோட்டக்கலைத் துறை உதவி வேளாண்மை அலுவலர் கருப்பசாமி, அட்மா திட்ட அலுவலர் தினேஷ் குமார், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.---------

