UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 06:14 PM

மேட்டுப்பாளையம்: காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு, வேளாண் பொருட்கள் விற்பனை குறித்தும், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செயல்பாடுகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில் 4ம் ஆண்டு பயிலும் மாணவிகள், ஊரக வேளாண்மை அனுபவ பயிற்சிக்காக, காரமடையில் தங்கியுள்ளனர். இந்த மாணவிகள் விவசாயிகளை சந்தித்து, சாகுபடி முறை, மகசூல், விளைபொருட்கள், உள்ளிட்ட விவராங்களை நேரடியாகக் கேட்டறிந்து வருகின்றனர்.
மேலும், புதிய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் பயிற்சி அளிக்கின்றனர். விவசாயம் சார்ந்த அரசுத் துறைகளின் செயல்பாடுகளையும் அறிந்து வருகின்றனர்.
காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலகத்தில், இந்த மாணவிகள் களப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் அலுவலக பணிகள், விளை பொருட்களை காய வைத்து ஏலம் வாயிலாக விற்பனை செய்வது, விவசாயிகளுக்கு பணம் வழங்கும் முறை, விவசாயிகளுக்கு அளிக்கப்படும் சேவைகள், இருப்பு வைத்தல், பொருளீட்டுக் கடன் ஆகியவை குறித்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.
