ADDED : செப் 23, 2026 05:43 PM
கோவை: தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கான காலநிலை மாற்றம் குறித்து சான்றிதழுடன் கூடிய உண்டு, உறைவிட சிறப்பு பயிற்சி முகாம், காருண்யா பல்கலையில் நேற்று துவங்கியது.
மூன்று நாள் பயிற்சியில், காலநிலை மாற்றத்துக்கான காரணங்கள், இயற்கை வளங்களில் ஏற்படும் தாக்கங்கள், சூற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித அமைப்பின் பொறுப்பு, நிலையான வாழ்க்கை முறை உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அமர்வுகள் நடக்கின்றன. சாடிவயல், கோவை குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு களப்பயணங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து பாடப்பிரிவுகளையும் சேர்ந்த 130 ஆசிரியர்கள், தமிழக காலநிலை கல்வி முன்னெடுப்பு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட பசுமைத் தோழர்கள் பங்கேற்றனர்.
