/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில்முனைவோருக்கு பயிற்சி; அடுத்தகட்ட நகர்வுக்கு ஆயத்தம்
/
தொழில்முனைவோருக்கு பயிற்சி; அடுத்தகட்ட நகர்வுக்கு ஆயத்தம்
தொழில்முனைவோருக்கு பயிற்சி; அடுத்தகட்ட நகர்வுக்கு ஆயத்தம்
தொழில்முனைவோருக்கு பயிற்சி; அடுத்தகட்ட நகர்வுக்கு ஆயத்தம்
ADDED : அக் 23, 2024 11:25 PM
கோவை : மத்திய அரசின், 'நிலையான பழுதில்லா உற்பத்தி, விளைவு இல்லா உற்பத்தி' சான்றளிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவையில் நடந்தது.
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, நிலையான பழுதில்லா உற்பத்தி, விளைவு இல்லா உற்பத்தி (இசட்.இ.டி.,) சான்றளிப்பு திட்டத்தை, ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள், பழுதில்லா மற்றும் விளைவு இல்லா சான்றிழிப்புக்காக ஊக்குவித்து, சாதனையாளர்களாக உருவாக்க வழிகாட்டுகிறது.
ஏற்கனவே தொழில் நடத்தி வரும் நிறுவனங்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் பொருட்கள் உற்பத்தி மேற்கொள்வது, உற்பத்தியை அதிகரிப்பது, சந்தையை விரிவுபடுத்துவது போன்றவை மேற்கொள்ள ஏதுவாக, சான்றிதழ் வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை, தங்கள் உலகளாவிய போட்டித்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த, சிறந்த நடைமுறைகளை பின்பற்ற ஊக்குவிக்கின்றனர். தங்கம், வெள்ளி, வெண்கலம் என்ற சான்றிதழ் பெற, மானியமும் வழங்குகின்றனர்.
இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவை மாவட்ட தொழில் மையத்தில் நடந்தது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற 30க்கும் மேற்பட்டோருக்கு, ஆலோசகர் சிவதாஸ் பயிற்சி அளித்தார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா, ஆலோசனை வழங்கினார்.