/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தலைமை ஆசிரியர்களுக்கு வரும் 29ல் பயிற்சி
/
தலைமை ஆசிரியர்களுக்கு வரும் 29ல் பயிற்சி
ADDED : ஜன 22, 2026 05:28 AM
பொள்ளாச்சி: பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்.எம்.சி.) செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து, 23 மாவட்டங்களில் தலைமையாசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் சிறந்த எஸ்.எம்.சி. செயல்பாடுகளைக் கொண்ட 3,757 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இப்பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, முன்மாதிரி பள்ளிகளாக மாற்ற, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, 1,909 பள்ளிகளில் எஸ்.எம்.சி. வழியாக ஆக்கப்பூர்வ மாற்றங்களை செயல்படுத்துவது குறித்து தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப் படவுள்ளது. கோவையில் இப்பயிற்சி வரும் 29-ல் நடக்கிறது. காலை 9:30 முதல் 4:30 மணி வரை பயிற்சி நடக்கிறது. ஆனைமலை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், சூலூர், பொள்ளாச்சி (வடக்கு, தெற்கு), எஸ்.எஸ்.குளம் வட்டாரங்களில் இருந்து, 58 தலைமையாசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

