sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 புதியதாக நியமிக்கப்பட்ட சர்வேயர்களுக்கு பயிற்சி

/

 புதியதாக நியமிக்கப்பட்ட சர்வேயர்களுக்கு பயிற்சி

 புதியதாக நியமிக்கப்பட்ட சர்வேயர்களுக்கு பயிற்சி

 புதியதாக நியமிக்கப்பட்ட சர்வேயர்களுக்கு பயிற்சி


ADDED : ஜன 23, 2026 05:05 AM

Google News

ADDED : ஜன 23, 2026 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: புதியதாக நியமிக்கப்பட்ட, 62 சர்வேயர்கள் மற்றும் டிராப்ட்ஸ் மேன்களுக்கான சிறப்பு பயிற்சிகளை நில அளவைத்துறை துணை இயக்குனர் மோகன் மற்றும் உதவி இயக்குனர் சரவணன் துவக்கி வைத்தனர்.

கோவை பொள்ளாச்சி சாலையிலுள்ள கிறிஸ்துஅரசர் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், நில அளவை, பதிவேடுகள் துறையில் புதியதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு நிலவரைபடம் தயாரிப்பது, வரைவது, நீண்ட மற்றும் குறுகிய அளவு குறிப்பு எழுதுதல்,

பென்சில் கிட், திசைகாட்டி, புதுப்பிப்பு கருவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட அளவில் கணக்கெடுப்பு பயிற்சியின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறை, பதிவு செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் பயிற்சி பெற்றவர்கள் விரைவில் தமிழக அரசின் பல்வேறு கணக்கெடுப்பு திட்டங்களுக்காக கள ஆய்வில் ஈடுபடவுள்ளனர் என சர்வே பிரிவினர் தெரிவித்தனர்.மதுக்கரை தாசில்தார் வேல்முருகன், தொழில்நுட்ப மேலாளர் கோபாலகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் முருகேசன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us