ADDED : செப் 17, 2026 07:43 PM
கோவை: மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் சி.ஐ.டி., சார்பில், பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் வரும் 26, 27ம் தேதிகளில் சி.ஐ.டி., கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.
8 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். அர்டுயினோ, இ.எஸ்.பி., உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் குறித்து செய்முறை பயிற்சி, எந்திரங்களின் செயல்பாடு, கைக்கடிகாரம் தயாரித்தல், தொலைநோக்கி பொருத்துதல் மற்றும் அதன் செயல்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், தொலைநோக்கி மூலம் சூரியனை பார்வையிடும் நிகழ்ச்சியும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து ஆராய்ச்சியாளர் சிறப்பு சொற்பொழிவும் இடம்பெறுகின்றன.
முகாமில் பங்கேற்க கட்டணம் இல்லை. ஆனால், முன்பதிவு கட்டாயம். பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், வீட்டு முகவரி மற்றும் தொடர்பு எண்ணை 6383543676 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.
