ADDED : ஜூன் 04, 2026 08:26 AM
அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், துவக்கப்பள்ளி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் ராஜாராம் பயிற்சியை துவக்கி வைத்தார்.
பயிற்சியில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
இதில் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு எளிமையான முறையில் கல்வி கற்றுத்தருவது குறித்தும், மாணவர்களுக்கு ஓவியம், பாடல், நடனம் வாயிலாக எளிய முறையில் பாடம் கற்றுத்தருவது குறித்தும், பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ் கல்வி தொடர்பான பயிற்சியில், 73 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
