ADDED : செப் 10, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
கோவை: வேளாண் பல்கலையில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 16, 17ம் தேதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
வேளாண் பல்கலை அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் நடக்கும் இப்பயிற்சியில், நெல்லி பானங்கள், பழரச பானம் மற்றும் தயார் நிலை பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி மற்றும் துருவல் தயாரிப்பது பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. விவரங்களுக்கு, 94885 18268 என்ற எண்ணில் பேசலாம்.
