/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறுவை சிகிச்சை திறன் மருத்துவர்களுக்கு பயிற்சி
/
அறுவை சிகிச்சை திறன் மருத்துவர்களுக்கு பயிற்சி
ADDED : நவ 13, 2024 05:07 AM

கோவை : கோவை ஆர்த்தோ ஒன் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு எலும்பியல் சங்கம் சார்பில், மருத்துவர்களுக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை திறன் வளர்ப்பு பயிற்சி நடந்தது.
வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையின் முது கெலும்பு அறுவை சிகிச்சைதுறை பேராசிரியர் டாக்டர் வெங்கடேஷ் கிருஷ்ணன் கலந்து கொண்டார். முதுகெலும்பு தண்டுவட நிபுணர்கள் பங்கு பெற்று பயிற்சி வகுப்பை தொகுத்து வழங்கினர்.
மேலும், முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை உபகரணங்கள் கையாளும் முறை பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கான புதிய யுக்திகளை கையாளும் விதம் குறித்தும் மருத்துவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டேவிட் ராஜன், முதன்மை அமைப்புச் செயலாளர் டாக்டர் ஸ்ரீ ராமலிங்கம், முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

