/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கை வேளாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
/
இயற்கை வேளாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
இயற்கை வேளாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
இயற்கை வேளாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : அக் 21, 2025 10:16 PM

சூலுார்: இயற்கை வேளாண்மை குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சூலுார் வட்டார வேளாண் துறை அட்மா திட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவ, மாணவியர் இயற்கை வேளாண்மை குறித்து அறிந்து கொள்ளும் வகையில், சூலுாரில் உள்ள செஞ்சோலை இயற்கை வழி வேளாண் பயிற்சி மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பயிற்றுனர் செந்தில் குமரன், இயற்கை வேளாண்மை அறிவியல்,அங்கக வேளாண்மையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள், வழிமுறைகள் குறித்து விளக்கினார். அங்கக இடு பொருட்கள் தயாரிக்கும் முறைகள் குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். மாணவர்கள் ஆர்வத்துடன் பயிற்சியில் பங்கேற்றனர்.
இந்த பட்டறிவு பயணத்தில், சூலுார், பீடம்பள்ளி, இருகூர், சின்னியம்பாளையம் அரசூர், வாகராயம் பாளையம் உள்ளிட்ட அரசு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். வேளாண் உதவி இயக்குனர் அருள் கவிதா தலைமையில் அட்மா திட்ட அலுவலர்கள் கவிதா, நந்தினி ஆகியோர் ஒருங்கிணைத்து இருந்தனர். இதேபோல், சுல்தான்பேட்டை வட்டார அரசு பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.