/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி
/
வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : மார் 08, 2024 12:24 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, வேளாண்துறை 'அட்மா' சார்பில், உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடந்தது.
கிணத்துக்கடவு, வேளாண்துறை 'அட்மா' சார்பில், விவசாயிகளுக்கு உள் மாவட்ட அளவிலான பயிற்சி வேளாண் அலுவலகத்தில் நடந்தது. கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் தலைமை வகித்தார்.
வேளாண் துணை அலுவலர் மோகனசுந்தரம், 'அட்மா' தலைவர் சுரேஷ்குமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் மேகலாதேவி, தோட்டக்கலை துறையினர் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், எண்ணெய் வித்து பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், கிசான் கடன் அட்டை பெறுதல், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் செயல் படுத்தப்படும் திட்டங்கள், பயிர் காப்பீடு, இயற்கை விவசாயம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

