ADDED : ஆக 26, 2025 06:12 AM
கோவை; மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள, 13 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து, மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதில், கோவை மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அருண், மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வினோத், சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் ஆகியோர் கோவை சரகத்திற்கும், குனியமுத்துார் இன்ஸ்பெக்டர் கஸ்துாரி, சிங்காநல்லுார் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா, ரத்தினபுரி புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, பீளமேடு இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சேலம் மாநகர குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழரசி ஆகியோர் சேலம் சரகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பீளமேடு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் திருப்பூர் மாநகருக்கும், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சரோஜா சேலம் மாநகருக்கும், திருப்பூர் மாநகர குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் இன்ஸ்பெக்டர் காளியப்பன், தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி ஆகியோர் கோவை மாநகருக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.