ADDED : அக் 08, 2024 11:53 PM
அன்னுார் : கோவை மாவட்டத்தில், ஆறு பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வட்டார வளர்ச்சி அலுவலர் (100 நாள் வேலை திட்டம்) ராஜேஸ்வரி, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு பணிபுரிந்த சிவகாமி, சுல்தான் பேட்டை ஒன்றியத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அங்கு பணிபுரிந்த ராதாகிருஷ்ணன், ஆனைமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக (வட்டார ஊராட்சி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அங்கு பணிபுரிந்து ஆனந்த், கோவை ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணிபுரிந்த லதா, சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக (வட்டார ஊராட்சி) நியமிக்கப்பட்டுள்ளார்.
அங்கு பணிபுரிந்து வந்த ராஜ செல்வம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள உத்தரவில், 'பணியிட மாறுதல் தொடர்பாக எந்த கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பணி மாறுதலை தவிர்க்க விடுமுறையில் செல்லக்கூடாது. மீறி விடுமுறையில் சென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,' என தெரிவித்துள்ளார்.