UPDATED : நவ 26, 2026 07:16 PM
ADDED : நவ 26, 2026 07:16 PM

அ நிறம் | அளவு
உடுமலை: மின் மாற்றியில், பழுதடைந்த மின்கம்பங்களை, ஒரே நாளில் மின் வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் மாற்றியுள்ளனர்.
உடுமலை நகரம், சிவசக்தி காலனியில் உள்ள மின்மாற்றியில், பொருத்தப்பட்டிருந்த இரண்டு மின்கம்பங்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டன. ஆபத்தான நிலையில் இருந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி தருமாறு அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, உடுமலை நகர மின்வாரிய உதவி பொறியாளர் சிவக்குமார், போர்மேன் அங்கமுத்து தலைமையிலான, மின்வாரியப்பணியாளர்கள், நேற்று முன்தினம் மின் கம்பங்கள் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இரு மின்கம்பங்களும் அகற்றப்பட்டு, புதிய மின் கம்பங்கள் பொருத்தப்பட்டு, ஒரே நாளில் பணிகள் நிறைவு செய்து, மின் வினியோகம் சீரமைக்கப்பட்டது.
