/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
38 ஆயிரம் பயணிகள் விமானங்களில் பயணம்
/
38 ஆயிரம் பயணிகள் விமானங்களில் பயணம்
ADDED : நவ 04, 2024 10:47 PM
கோவை; கோவையில் இருந்து சென்னை, ஐதராபாத், டில்லி, மும்பை, பெங்களூரு நகரங்களுக்கு நேரடி விமான போக்குவரத்து உள்ளது. வெளிநாடுகளுக்கு சிங்கப்பூர், அபுதாபி, ஷார்ஜாவுக்கு நேரடி விமான போக்குவரத்து உள்ளது. தீபாவளியை முன்னிட்டு கோவையில் இருந்து இனிப்புகள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் இவ்விமானங்களில் சென்றன.
பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், விமான நிறுவனங்கள் விமான போக்குவரத்தின் அளவை அதிகரித்தன. வழக்கமாக, 24 முறை சென்று வரும் விமானத்தின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. அக்., 30ல் 8,688 பேர், அக்., 31ல் 34 விமான போக்குவரத்தில் 7,636 பேர் பயணித்தனர். நவ., 1ல் 30 விமானங்கள் இயக்கப்பட்டன; 6,168 பேர் பயணித்தனர். நவ., 3ல் 7500 பேர் பயணித்துள்ளனர். அதிக அளவில் சென்னைக்கு பயணிகள் சென்று வந்துள்ளனர்.
இந்த ஐந்து நாட்களில், 38 ஆயிரம் பேர் பயணித்தனர். நவ., 4ல் 7,200 பயணிகள் பயணித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாடியுள்ளனர்.