/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம்; ரூ.48 லட்சம் அபராதம்
/
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம்; ரூ.48 லட்சம் அபராதம்
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம்; ரூ.48 லட்சம் அபராதம்
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம்; ரூ.48 லட்சம் அபராதம்
ADDED : அக் 18, 2024 11:21 PM

கோவை : சேலம் ரயில்வே கோட்டத்தில், கடந்த 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில், டிக்கெட் இன்றி பயணம் உட்பட, முறைகேடான பயணங்கள் மீது ரூ.48 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் இன்றி பயணித்த வகையில், 4,059 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 31 லட்சத்து 25 ஆயிரத்து 485 அபராதம் வசூலிக்கப்பட்டது. முறைகேடாக பயணம் செய்த வகையில், 17 லட்சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. பதிவு செய்யாமல் லக்கேஜ் கொண்டு செல்லப்பட்ட வகையில், 21 ஆயிரத்து 270 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மொத்தம் 8,390 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 48 லட்சத்து 61 ஆயிரத்து, 55 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.