/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதர் சூழ்ந்த கருவூல அலுவலகம்; பாம்புகள் இருப்பதால் அச்சம்
/
புதர் சூழ்ந்த கருவூல அலுவலகம்; பாம்புகள் இருப்பதால் அச்சம்
புதர் சூழ்ந்த கருவூல அலுவலகம்; பாம்புகள் இருப்பதால் அச்சம்
புதர் சூழ்ந்த கருவூல அலுவலகம்; பாம்புகள் இருப்பதால் அச்சம்
ADDED : நவ 25, 2024 10:33 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அரசு கருவூல அலுவலகம் சுற்றிலும் புதர்மண்டி இருப்பதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே அரசு கருவூலம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை சுற்றிலும் செடிகள் முளைத்து புதர் போல் காணப்படுகிறது. இந்த ரோட்டின் ஓரத்தில் அவ்வழியே செல்பவர்கள் குப்பையை வீசிச் செல்கின்றனர். இதனால் அங்கு பொது சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், துர்நாற்றம் வீசுகிறது.
புதரை அகற்றாமல், நீண்ட நாட்களாக அப்படியே விட்டிருப்பதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் தென்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும் கருவூலத்துக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை, ரோட்டிலேயே நிறுத்தி செல்கின்றனர். இதனால், ரோட்டில் பெரிய வாகனங்கள் வரும்போது நெரிசல் ஏற்படுகிறது.
கருவூலம் அருகே, கடைகள் மற்றும் வீடுகள் இருப்பதால் விஷப்பூச்சிகள் அச்சுறுத்தலால், இரவு நேரங்களில் நடை பயணம் மேற்கொள்ளவும் மக்கள் சிரமப்படுகின்றனர். மாலை நேரத்தில் கொசுத்தொல்லையும் அதிகம் உள்ளது.
இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர்.
மக்கள் கூறுகையில், 'கருவூலம் அமைந்துள்ள இடத்தில் புதர் வளர்ந்து காணப்படுகிறது. இரு நாட்களுக்கு முன், பாம்பு ஊர்ந்து செல்வதை சிலர் பார்த்துள்ளனர். பொது இடத்தை தூய்மையாக வைக்க வேண்டுமென அறிவுறுத்தும் நிலையில், அரசு அலுவலகமே இப்படி புதர் சூழ்ந்துள்ளது. மக்கள் நலன் கருதி புதரை அகற்றி சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.