ADDED : ஆக 24, 2026 03:20 PM
அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறை அருகே, ரோட்டில் மரம் விழுந்து மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
வால்பாறையில் கடந்த தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்கிறது. காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மரம் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறையில் இருந்து சின்கோனா(டான்டீ) செல்லும் நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் நேற்று காலை, 7:00 மணிக்கு மரம் விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், மரத்தை வெட்டி அறுத்தனர்.
ரோட்டின் குறுக்கே மரம் விழுந்ததால் வால்பாறை – சின்கோனா ரோட்டில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அகற்றிய பின் போக்குவரத்து சீரானது.
