/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி ஸ்கொயர் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
/
ஜி ஸ்கொயர் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
ADDED : ஜூன் 08, 2025 10:40 PM
போத்தனூர்; கோவைபுதூர் அருகே ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு உலக சுற்றுசூழல் தினம் முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நல்லறம் அறக்கட்டளை நிறுவனர் அன்பரசன், நடிகர் தாமு உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டனர்.
இதுகுறித்து, ஜி ஸ்கொயர் குழுமத்தின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குனர் பால ராமஜெயம் கூறுகையில், ''ரியல் எஸ்டேட் துறையில் இருப்போர், பிளாஸ்டிக் மாசு தவிர்க்கும் வகையில். சுற்றுச்சூழலை பாதுகாக்க பாடுபட வேண்டும். கட்டுமானத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத, மூங்கில், மரம் உள்ளிட்ட பொருட்களை, உபயோகப்படுத்த வேண்டும். அவ்வகையில் பசுமையை மேம்படுத்தும் வகையில், மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன,'' என்றார்.