/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அழிவிலிருந்து மரங்களை காக்க வேண்டும்: கருத்தரங்கில் வலியுறுத்தல்
/
அழிவிலிருந்து மரங்களை காக்க வேண்டும்: கருத்தரங்கில் வலியுறுத்தல்
அழிவிலிருந்து மரங்களை காக்க வேண்டும்: கருத்தரங்கில் வலியுறுத்தல்
அழிவிலிருந்து மரங்களை காக்க வேண்டும்: கருத்தரங்கில் வலியுறுத்தல்
ADDED : மார் 25, 2025 12:32 AM
அன்னுார்:
அழிவிலிருந்து மரங்களைக் காக்க, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சர்வதேச வன தினத்தை முன்னிட்டு, இணைய வழி கருத்தரங்கம் அன்னுாரில் நடந்தது. இதில் கிராம தங்கல் திட்டத்தில், அன்னுாரில், ஈரோடு ஜே.கே.கே. முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் அவிநாசி ஈஸ்ட் ரோட்டராக்ட் கிளப் நிர்வாகிகள் இணைந்து கருத்தரங்கை நடத்தினர்.
இதில் தனியார் நிறுவன உதவி வன அலுவலர் மணிவேல் பேசுகையில், அழிவிலிருந்து மரங்களை காக்க வேண்டும். சாலை மேம்பாடு, தொழிற்சாலை பயன்பாடு, வீட்டு உபயோகம் என பலவற்றுக்காக மரங்கள் அழிக்கப்படுகின்றன.
இதை ஈடு கட்டும் வகையில் கூடுதலாக மரக்கன்று நடுதல், பராமரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலில் மரங்கள் பெரும் பங்கு வைக்கின்றன.
தற்போது இதில் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக வனப்பகுதி அதிகரித்தல், வன மேலாண்மை செய்தல் ஆகியவை எளிதாகியுள்ளது, என்றார்.
இதில் கிராம தங்கல் திட்ட மாணவர்கள், பேராசிரியர்கள், பிற கல்வி நிறுவன மாணவர்கள் பங்கேற்றனர். வன மேலாண்மை, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.