/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடவள்ளி சாலையில் மரம் வெட்ட கூடாது! தடை விதித்தது சென்னை ஐகோர்ட்
/
வடவள்ளி சாலையில் மரம் வெட்ட கூடாது! தடை விதித்தது சென்னை ஐகோர்ட்
வடவள்ளி சாலையில் மரம் வெட்ட கூடாது! தடை விதித்தது சென்னை ஐகோர்ட்
வடவள்ளி சாலையில் மரம் வெட்ட கூடாது! தடை விதித்தது சென்னை ஐகோர்ட்
UPDATED : பிப் 07, 2026 07:23 AM
ADDED : பிப் 07, 2026 05:18 AM

வடவள்ளி : வடவள்ளி முதல் மருதமலை அடிவாரம் வரையிலான சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில், சாலையோரங்களில் உள்ள மரங்களை அகற்றவோ அல்லது வெட்டவோ சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
வடவள்ளியில் ஏராள மான குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், அண்ணா பல்கலை மற்றும் பாரதியார் பல்கலை, சட்டக் கல்லூரி, சார் பதிவாளர் அலுவலகம், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட ஏராளமான முக்கிய இடங்கள் உள்ளதால், மருதமலை சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, வடவள்ளி ஆலமரம் பஸ் ஸ்டாப் முதல் மருதமலை அடிவாரம் வரையிலான, 7 மீட்டர் சாலையை, 15 மீட்டர் சாலையாக விரிவாக்கம் செய்து, நான்கு வழிச்சாலையாக மாற்ற மாநில நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டனர்.
திட்ட மதிப்பீட்டுக்கு அரசு ஒப்புதல் அளித்தது. சாலை விரிவாக்கத்திற்காக சாலை ஓரங்களில் உள்ள, மரங்களை அகற்ற வருவாய்த்துறையிடமும் அனுமதி பெறப்பட்டது.
இந்நிலையில், சாலை விரிவாக்கத்தின் போது, நூற்றுக்கணக்கான நாட்டு மரங்களை அகற்றுவதால், பறவைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படும், பாரதியார் பல்கலை முதல் மருதமலை அடிவாரம் வரை நான்கு வழிச்சாலையாக மாற்றினால், சாலையில் தடுப்பு சுவர் அமைக்கப்படும்.
அப்பகுதி, காட்டு யானைகள் வழித்தடமாக உள்ளதால், அவற்றின் வழி மறைக்கப்பட்டு, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடும் என, சென்னையைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ் குமார் மற்று ம் டி.பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, எதிர்மனுதாரர்கள் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, பிரச்னை இறுதி செய்யப்படும் வரை, வடவள்ளி, மருதமலை இடையே உள்ள மரங்களை அகற்றவோ, வெட்டவோ நெடுஞ்சாலைத்துறைக்கு தடை விதிக்கப்படும் என உத்தரவிட்டனர்.

