UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 07:36 PM

அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு கிராமப்புறங்களில் மரங்கள் சாய்ந்தன.
கிணத்துக்கடவு வட்டாரத்தில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில், கோதவாடி செல்லும் ரோட்டோரம் மரங்கள் மற்றும் விளை நிலங்கள் ஓரத்தில் இருந்த கம்பி வேலி ரோட்டில் சாய்ந்தது.
இதே போன்று, கோடங்கிபாளையம் செல்லும் ரோட்டிலும் மரம் சாய்ந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்களே மரத்தை ரோட்டோரம் நகர்த்தி வைத்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஒரு சில தனியார் தோப்பில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
