/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லாறு-பர்லியார் இடையே மலையேற்றம் மீண்டும் ரத்து
/
கல்லாறு-பர்லியார் இடையே மலையேற்றம் மீண்டும் ரத்து
ADDED : ஏப் 19, 2025 03:14 AM
மேட்டுப்பாளையம்: கல்லாறு - பர்லியார் இடையே மலையேற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் 15ம் தேதிக்கு மேல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டது, தற்போது நிர்வாக காரணங்களுக்காக மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கல்லாறு-பர்லியார் இடையே 3.5 கி.மீ., தூரம் அடர் வனப்பகுதியில், சுற்றுலா பயணிகள் மலையேற்றம் மேற்கொள்ளும் வகையில் புதிதாக கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்த மலையேற்றம் திட்டம் துவங்கியது.
இத்திட்டத்தின் வாயிலாக கல்லாறு பகுதியை பழங்குடியினர் வேலைவாய்ப்பு பெற்றனர். சுமார் இதுவரை 450க்கும் மேற்பட்டோர் மலையேற்றம் பயணம் செய்துள்ளனர்.
இதனிடையே கடும் வெயில் நிலவி வந்ததால், வனத்தில் காட்டுத்தீ விபத்து அபாயம் நிலவியது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 2 வது வாரத்திற்கு மேல் மலையேற்றம் சுற்றுலா திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் 15ம் தேதிக்கு மேல் துவங்கப்படும் தெரிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், 'கடந்த 15ம் தேதிக்கு மேல் மீண்டும் மலையேற்றம் திட்டம் துவங்கும் என தெரிவித்திருந்தோம். நிர்வாக காரணங்களால் அது மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளது' என்றனர்.---