/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்! பழங்குடியின மக்கள் கோரிக்கை
/
ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்! பழங்குடியின மக்கள் கோரிக்கை
ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்! பழங்குடியின மக்கள் கோரிக்கை
ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்! பழங்குடியின மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 23, 2025 08:59 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, நவமலை பகுதியில் விபத்தில் இறந்த பழங்குடியினரின் குடும்பத்துக்கு, தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி நவமலை பழங்குடியின மக்கள் மற்றும் ஆனைமலை ஒன்றியக்குழு மா.கம்யூ., கட்சி செயலாளர் பரமசிவம் சப் - கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறை - ஆழியாறு ரோட்டில் கடந்த, 17ம் தேதி நவமலையை சேர்ந்த பழங்குடியின மக்கள், 25 பேர் சரக்கு வாகனத்தில் காட்டம்பட்டியில் பி.ஏ.பி., கால்வாய் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
எதிர்பாராதவிதமாக வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஐந்து பேர் இறந்தனர். கோவை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், ஆறு பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து, 14 பேர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டனர்.
தற்போது அவர்கள், நவமலையில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கின்றனர். ஓலைக்குடிசை, குடிசைகளுக்கு மேல் சிமென்ட் சாக்கு பை, படுதா போன்றவை கொண்டு போர்த்திய நிலையில் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதற்குரிய தீர்வு காண வேண்டும்.
வாகன விபத்தில் இறந்த குடும்பத்தினருக்கு நிவாரணமாக, 20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும். பழங்குடியின நலவாரிய திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணப்பயன்கள், நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.
ஆழியாறு அணை கட்டுமானத்திற்கான பணிகளின் போது அணைப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு, இதுநாள் வரை பட்டா வழங்கவில்லை. உடனடியாக அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் பட்டா வழங்கி, வீட்டுமனை கட்டித்தர வேண்டும்.
அரசு வீடுகள் கட்டித்தரும் வரை பயனின்றி கிடக்கும் மின்வாரிய குடியிருப்புகளை, பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கிட வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.