/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உறுதியளித்தபடி பேச்சுக்கு வராததால் பழங்குடி மக்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
உறுதியளித்தபடி பேச்சுக்கு வராததால் பழங்குடி மக்கள் உள்ளிருப்பு போராட்டம்
உறுதியளித்தபடி பேச்சுக்கு வராததால் பழங்குடி மக்கள் உள்ளிருப்பு போராட்டம்
உறுதியளித்தபடி பேச்சுக்கு வராததால் பழங்குடி மக்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஜன 04, 2026 05:03 AM
கோவை: மாநகராட்சி வடக்கு அலுவலகத்தில், பேச்சு வார்த்தை நடத்த அரசு அதிகாரிகள் வராததால், பழங்குடி மக்கள், உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
வீடு இல்லாத பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும், 2006ம் ஆண்டு வன உரிமை சட்டத்தினை முழுமையாக அமல்படுத்த வேண்டும், பழங்குடி மக்களுக்கு பத்து லட்சம் ரூபாயில் தரமான அரசு வீடு கட்டித்தர வேண்டும் என்பன, உள்ளிட்ட கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்ற கோரி கடந்த மாதம், 18ம் தேதி கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு, காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
ஜன., 2ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்றப்படும் என, கலெக்டர் உறுதியளித்ததால் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் கலெக்டர் உத்தரவின்படி, கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நேற்று முன் தினம் மதியம் 3:00 மணிக்கு, பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு வராததால், வந்திருந்தவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாநகராட்சி இணை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள், கோரிக்கைளை நிறைவேற்றுவதாக, உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர்.

