/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மறைந்த கவிஞருக்கு அஞ்சலி நிகழ்வு
/
மறைந்த கவிஞருக்கு அஞ்சலி நிகழ்வு
ADDED : நவ 25, 2025 05:45 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பட்டாம்பூச்சி இலக்கிய அமைப்பு சார்பில் மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, பாலக்காடு ரோடு அரிமா சங்க கட்டத்தில் நடந்தது.
பட்டாம்பூச்சி குழுமங்களின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் முருகானந்தம் தலைமை வகித்தார். பொள்ளாச்சி கம்பன் கலை மன்ற தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, கவிஞர் ஈரோடு தமிழன்பனின் எழுத்தாளுமை, படைப்புகள், அவர் பெற்ற சாகித்திய அகாடமி விருது குறித்து விளக்கப்பட்டது.
இதில், பொள்ளாச்சி இலக்கிய வட்ட செயலாளர் கவிஞர் பூபாலன், தலைவர் அம்சப்ரியா, ஆண்டாள் அறக்கட்டளை தலைவர் சாந்தலிங்கம், சதுரங்க சங்க செயலாளர் பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

