ADDED : பிப் 26, 2026 07:43 AM

கா லமான இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு உருவப்படத்துக்கு கோவை மாவட்ட இ.கம்யூ., அலுவலகத்தில், மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவசாமி தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் ஆறுமுகம், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பத்மநாபன், இ.கம்யூ., மாவட்ட துணை செயலாளர்கள் ஜேம்ஸ், தங்கவேல், பொருளாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
கட்சியின் மாவட்ட செயலாளர் சிவசாமி கூறுகையில்,''வரும் 27ம் தேதி(நாளை) மாலை 4:00 மணிக்கு கோவையில் அஞ்சலி ஊர்வலம், அஞ்சலி கூட்டம் நடைபெறும்.
ஊர்வலம் வடகோவை சிந்தாமணி அருகில் இருந்து புறப்பட்டு, பூமார்க்கெட் சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள ஜீவா இல்லம் வந்தடையும்.
அங்கு அஞ்சலி கூட்டம் நடத்தப்படும். அனைத்து கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்,'' என்றார்.

