/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணியின் போது வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
/
பணியின் போது வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
பணியின் போது வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
பணியின் போது வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
ADDED : ஏப் 14, 2025 11:12 PM

கோவை; பணியின் போது இறந்த, தீயணைப்பு துறை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், மாவட்ட தீயணைப்பு நிலையத்தில் நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது.
கடந்த, 1944 ஏப்.,14ல், மும்பை விக்டோரியா துறைமுகத்தில், நிறுத்தப்பட்டு இருந்த கப்பலில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க கடுமையாக போராடிய, தீயணைப்பு வீரர்கள், 66 பேர் உட்பட, 220 பேர் பலியாகினர். அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், நாடு முழுவதும், ஆண்டுதோறும், ஏப்.,14ல், தீத்தொண்டு தினம் அனுசரிக்கப்படுகிறது.
நேற்று தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில், 'தீ தொண்டு தினம்' அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு ஒரு பகுதியாக, கோவை மாவட்ட தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தூணுக்கு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நிலைய அலுவலர்கள் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தீயணைப்பு பணிகளின் போது உயிரிழந்த வீரர்களுக்கு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.