/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்திய தேசிய தொழிற்சங்க தலைவருக்கு நினைவஞ்சலி
/
இந்திய தேசிய தொழிற்சங்க தலைவருக்கு நினைவஞ்சலி
ADDED : செப் 15, 2025 09:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; இந்திய தேசிய தொழிற்சங்க முன்னாள் தலைவர் செங்காளியப்பனின், 19வது நினைவு அஞ்சலி கூட்டம், ராமநாதபுரத்தில் உள்ள, ஐ.என்.டி.யு.சி., சங்கத்தில் நடந்தது.
அவரது உருவப்படத்துக்கு, பஞ்சாலை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மில் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
ஐ.என்.டி.யு.சி., சங்க தலைவர் கோவைசெல்வன், பொதுச்செயலாளர் ஸ்ரீதர், துணை பொதுச்செயலாளர்கள் பாலசுந்தரம், ஆறுச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.