/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடர் சாலை விதிமீறல்களுக்கு மும்மடங்கு அபராதம்! கண்காணிக்கிறது ஐ.டி.எம்.எஸ்.,
/
தொடர் சாலை விதிமீறல்களுக்கு மும்மடங்கு அபராதம்! கண்காணிக்கிறது ஐ.டி.எம்.எஸ்.,
தொடர் சாலை விதிமீறல்களுக்கு மும்மடங்கு அபராதம்! கண்காணிக்கிறது ஐ.டி.எம்.எஸ்.,
தொடர் சாலை விதிமீறல்களுக்கு மும்மடங்கு அபராதம்! கண்காணிக்கிறது ஐ.டி.எம்.எஸ்.,
ADDED : அக் 13, 2024 10:37 PM

கோவை L கோவை மாநகரில், சாலைப்போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த, தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு மும்மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்காக, ஐந்து இடங்களில், ஐ.டி.எம்.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது.
மாநிலத்திலேயே, கோவையில்தான் சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மெட்ரோ நகரான சென்னைக்கு நிகராக, கோவையிலும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பெரும்பாலான விபத்துகளுக்கு விதிமீறல்களே காரணமாக உள்ளன. கல்லுாரி, அலுவலகம், தொழில் நிறுவனங்களுக்கு பரபரப்பாக செல்வோர், சாலை விதிகளை உரிய முறையில் பின்பற்றுவதில்லை. பெரும்பாலான கல்லுாரி மாணவர்கள் ஹெல்மெட் அணிவதே இல்லை. இதனால், விபத்துகளின்போது, உயிரிழப்பு அதிகமாக உள்ளது.
ஐ.டி.எம்.எஸ்., கேமரா
விபத்துகளை குறைக்கவும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். அவ்வகையில், மாநகரின் முக்கிய இடங்களாக அத்திபாளையம் பிரிவு, காந்திபுரம், டவுன்ஹால், காமராஜபுரம் மற்றும் ஹோப்ஸ் ஆகிய ஐந்து இடங்களில் ஐ.டி.எம்.எஸ்., (நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள், ஹெல்மெட் அணியாமல் செல்வது, வேகம், நம்பர் பிளேட், சிக்னல் விதிகளை மீறுவது உள்ளிட்ட விதிமீறல் வாகனங்களைப் படம் எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அதிகாரிகள் அந்தந்த குற்றங்களுக்கு ஏற்றவாறு அபாரம் விதித்து, வாகன ஓட்டிகளின் மொபைல் எண்ணிக்கு 'சலான்' அனுப்புகின்றனர்.
எச்சரிக்கும் 'டெலிவாய்ஸ்'
போக்குவரத்து துணை கமிஷனர் அசோக் குமார் கூறியதாவது:
அபராதம் செலுத்தாத வாகன ஓட்டிகளின் மொபைல் எண்ணிற்கு 'டெலிவாய்ஸ்' அனுப்பி, இணைய வழியில் செலுத்த, வலியுறுத்தப்படுகிறது. அபராதம் செலுத்தாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொடர் விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு மும்மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதாவது, போக்குவரத்து விதிகளை மீறுவது, நோ பார்க்கிங் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு முதல் முறை ரூ. 500ம், இரண்டாம் முறை ரூ. 1,500ம் அபராதம் விதிக்கப்படுகிறது. விதிமீறல்களைப் பொறுத்து இது மாறுபடும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.