/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயர் மட்ட பாலம் இல்லாமல் சிக்கல் மாநில நெடுஞ்சாலையில் அவலம்
/
உயர் மட்ட பாலம் இல்லாமல் சிக்கல் மாநில நெடுஞ்சாலையில் அவலம்
உயர் மட்ட பாலம் இல்லாமல் சிக்கல் மாநில நெடுஞ்சாலையில் அவலம்
உயர் மட்ட பாலம் இல்லாமல் சிக்கல் மாநில நெடுஞ்சாலையில் அவலம்
ADDED : ஏப் 25, 2025 11:37 PM
குடிமங்கலம்: குடிமங்கலம் அருகே, தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் உப்பாறு ஓடையின் குறுக்கே, உயர் மட்ட பாலம் இல்லாததால், போக்குவரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், உடுமலை உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பிலுள்ள பகுதியில், உப்பாறு ஓடை பல இடங்களில், குறுக்கிடுகிறது.
இந்த ஓடையில், மழைக்காலங்களில், அதிக வெள்ளப்பெருக்கு இருக்கும். இதனால், பெதப்பம்பட்டி அருகே, மாநில நெடுஞ்சாலையில், ஓடையின் குறுக்கே, உயர் மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், சுங்காரமுடக்கு அருகே தரைமட்ட பாலமே பயன்பாட்டில் உள்ளது. பாலத்தின் தெற்குப்பகுதியில், ஏற்கனவே ஒரு தடுப்பணை பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், பாலத்தின் வடக்குப்பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக தடுப்பணை கட்டப்பட்டது.
மழைக்காலத்தில், ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, தடுப்பணையில் இருந்து மாநில நெடுஞ்சாலை தரைமட்ட பாலம் வரை, தண்ணீர் தேங்குகிறது. உபரி நீர் வெளியேற வழியில்லாததால், மாநில நெடுஞ்சாலையிலுள்ள தரை மட்ட பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் தேங்குகிறது.
பருவமழை சீசனில், தாராபுரம் மாநில நெடுஞ்சாலை தரைமட்ட பாலத்தில், தண்ணீர் தேங்கி, இருசக்கர வாகன ஓட்டுநர்கள் அப்பகுதியை கடக்க சிரமப்படுவது தொடர்கதையாக உள்ளது.
மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கனரக வாகனங்கள் அதிகளவு செல்வதால், தரைமட்ட பாலமும் வலுவிழந்து வருகிறது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக ஓடையின் குறுக்கே, உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறையை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.