UPDATED : அக் 07, 2026 07:21 PM
ADDED : அக் 07, 2026 07:17 PM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் சங்கம் (டேக்ட்) நிர்வாகிகள், வணிகவரி இணை கமிஷனர் சங்கீதாவை சந்தித்தனர்.
அப்போது குறுந்தொழில் நிறுவனங்கள் ஜாப் ஆர்டர் அடிப்படையில் பொருட்களை உற்பத்தி செய்கிறோம். எந்திரங்கள், உதிரிபாகங்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் போது பறக்கும் படை மூலம் பல நெருக்கடிகளை சந்திக்கிறோம். இப்பிரச்னைக்கு தீர்வு வேண்டும். அனைத்து தொழில் அமைப்புகளுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். தொழில் வளர்ச்சிக்கு தடையாக உள்ள நடைமுறைகளை தடுக்க, நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.
