UPDATED : நவ 28, 2026 05:20 PM
ADDED : நவ 28, 2026 05:20 PM
அ நிறம் | அளவு
சூலூர்: சேலம் மாவட்டம் தாண்டவராய புரத்தை சேர்ந்தவர் சக்தீஸ்வரன், 34; லாரி டிரைவர். 24 ம் தேதி லோடு ஏற்றிக்கொண்டு, ஈரோட்டில் இருந்து, சுல்தான்பேட்டை அடுத்த பூராண்டாம் பாளையம் வந்துள்ளார். செஞ்சேரி பிரிவு அருகே பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்தியுள்ளார். லாரி உரிமையாளர் தினேஷ் பலமுறை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை.
சம்பவ இடத்திற்கு அவர் வந்து பார்த்தபோது, லாரியில் போன் இருந்துள்ளது. வாய்க்கால் அருகே சக்தீஸ்வரன் அணிந்திருந்த உடைகள் மற்றும் லாரி சாவி இருந்துள்ளது. டிரைவரின் தாய் அளித்த புகாரின் பேரில், சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
