/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராவல் மண் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து; வீடியோ எடுத்தவருக்கு சரமாரி அடி
/
கிராவல் மண் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து; வீடியோ எடுத்தவருக்கு சரமாரி அடி
கிராவல் மண் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து; வீடியோ எடுத்தவருக்கு சரமாரி அடி
கிராவல் மண் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து; வீடியோ எடுத்தவருக்கு சரமாரி அடி
ADDED : நவ 20, 2024 10:58 PM
தொண்டாமுத்தூர்; கிராவல் மண் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
போத்தனூரை சேர்ந்தவர் சிவா,40. இவர், சமீபத்தில், பேரூர் தாலுகாவில் அனுமதியின்றி மண் எடுப்பதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவ்வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை, நரசீபுரத்தில், கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி, எதிர்பாராமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சிவா, சட்டவிரோதமாக மண் ஏற்றி வந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை செய்து, அந்த வாகனம், உரிய அனுமதி பெற்று மண் எடுத்து வந்துள்ளதாகவும், அதற்கான ஆவணங்களையும், வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், சிவா, லாரியை போட்டோ எடுக்கும்போது, அங்கிருந்த சிலர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக, ஆலாந்துறை போலீசில் சிவா புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஆலந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, சிவாவை தாக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விராலியூரை சேர்ந்த சுதாகரன், 29 என்பவர், டிப்பர் லாரி விபத்துக்குள்ளானதை பார்க்கச் சென்றபோது, வீடியோ எடுத்து கொண்டிருந்த சிவா, தன்னை பார்த்து, 40 லட்சம் அபராதம் போட்டும் உங்கள் திருட்டு வேலைக்கு அளவே இல்லையா, எனக்கு, 2 லட்சம் ரூபாய் பணம் கொடு இல்லையென்றால், மண் திருட்டில் நீயும் உடந்தை என, கோர்ட்டில் காட்டி, சிறையில் அடைத்து விடுவேன் என மிரட்டியதாக ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில், ஆலாந்துறை போலீசார், சிவா மீது தகாத வார்த்தைகளில் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிவா அளித்த புகாரின் அடிப்படையில், மண் திருட்டில் ஈடுபட்டதாக, சுதாகரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

