/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் கழிவுகளை கிணற்றில் கொட்டிய லாரி சிறை பிடிப்பு
/
பிளாஸ்டிக் கழிவுகளை கிணற்றில் கொட்டிய லாரி சிறை பிடிப்பு
பிளாஸ்டிக் கழிவுகளை கிணற்றில் கொட்டிய லாரி சிறை பிடிப்பு
பிளாஸ்டிக் கழிவுகளை கிணற்றில் கொட்டிய லாரி சிறை பிடிப்பு
ADDED : ஜூலை 22, 2025 10:28 PM
அன்னுார்; பிளாஸ்டிக் கழிவுகளை, விவசாய கிணற்றில் கொட்டிய லாரி சிறை பிடிக்கப்பட்டது.
அன்னுார் அருகே தொட்டியனுாரில் அம்மன் கோவில் அருகே கருப்பசாமி என்பவரின் தோட்டத்து கிணறு உள்ளது.
100 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் மண் நிரப்பும்படி ஒப்பந்ததாரர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் தோட்டத்தில் யாரும் இல்லாத போது, மருத்துவக் கழிவு, பிளாஸ்டிக் கழிவு, தோல் கழிவு, குப்பைகள் ஆகியவற்றை லோடு கணக்கில் கொட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினரும், அப்பகுதி மக்களும், நேற்று மதியம் மீண்டும் அந்த லாரி பிளாஸ்டிக் கழிவுகளுடன் வந்ததை பார்த்து லாரியை சிறை பிடித்தனர்.
பிள்ளையப்பம் பாளையம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் எஸ்.ஐ., கனகராஜ், ஊராட்சி செயலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் அங்கு விசாரணை நடத்தினர்.
விவசாயிகள் சிறை பிடித்த லாரியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கழிவுகளை விவசாய கிணற்றில் கொட்டியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.