/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கருமத்தம்பட்டி, சூலுாரில் இரு ஆதார் மையங்கள் 'ரெடி'
/
கருமத்தம்பட்டி, சூலுாரில் இரு ஆதார் மையங்கள் 'ரெடி'
கருமத்தம்பட்டி, சூலுாரில் இரு ஆதார் மையங்கள் 'ரெடி'
கருமத்தம்பட்டி, சூலுாரில் இரு ஆதார் மையங்கள் 'ரெடி'
ADDED : அக் 08, 2025 11:30 PM

சூலுார்; கருமத்தம்பட்டி மற்றும் சூலுாரில், இரு நிரந்தர ஆதார் மையங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளன.
சூலுார் ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள், கருமத்தம்பட்டி நகராட்சி, சூலுார், இருகூர், கண்ணம்பாளையம், பள்ளபாளையம் மற்றும் மோப்பிரிபாளையம் உள்ளிட்ட பேரூராட்சிகள் உள்ளன. 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
மக்கள் பல்வேறு தேவைகளுக்காக, ஆதார் மையங்களை நாடி வருகின்றனர். சூலுார் தாலுகா அலுவலகம், தபால் நிலையம், ஒரு சில வங்கிகளில் மட்டும் ஆதார் மையங்கள் உள்ளன. தாலுகா அலுவலக மையம் மட்டும் முறையாக செயல்படுகிறது.
மற்ற இடங்களில் முறையான சேவை வழங்குவதில்லை. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கூடுதல் ஆதார் மையங்கள் திறக்க வேண்டும், என, பல தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், எல்காட் நிறுவனம் சார்பில், சூலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் தலா ஒரு ஆதார் மையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டு, திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளன.