ADDED : ஜூன் 08, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தீத்திபாளையம், பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியில், அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீது,49, இருசக்கர வாகனத்தில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தார்.
அப்துல் சமீதை போலீசார் கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த 27 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
* தீத்திபாளையம், அய்யா சாமி கோவில் வீதியில் மது விற்பனையில் ஈடுபட்ட, துளசிமணி, 66 என்பவரையும், போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
