/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
/
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
ADDED : டிச 03, 2024 11:39 PM

தொண்டாமுத்தூர்; நரசீபுரம் மெயின் ரோட்டில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, நரசீபுரம் மெயின் ரோடு, மல்லிகை நகர் பஸ் ஸ்டாப் அருகே, கஞ்சா விற்பனை நடப்பதாக, ரூரல் எஸ்.பி.,யின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, தனிப்படை போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தபோது, சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து, சோதனை செய்தனர்.
அப்போது, அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பசந்தகுமார் நாயக்,32 மற்றும் ஹேமந்த் நாயக், 28 ஆகியோர் என்பதும், இருவரும் சூலூர் அடுத்த கரியாம்பாளையம் பகுதியில் தங்கி, காஸ் கம்பெனியில் வேலை செய்து வருவதும், விடுமுறை நாட்களில், தொண்டாமுத்தூர் பகுதிக்கு வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த, 1 கிலோ 900 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கஞ்சாவுடன் இருவரையும், தொண்டாமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். தொண்டாமுத்தூர் போலீசார் இருவர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.