/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா விற்ற இருவர் கைது; காருடன் ஒரு கத்தி பறிமுதல்
/
கஞ்சா விற்ற இருவர் கைது; காருடன் ஒரு கத்தி பறிமுதல்
கஞ்சா விற்ற இருவர் கைது; காருடன் ஒரு கத்தி பறிமுதல்
கஞ்சா விற்ற இருவர் கைது; காருடன் ஒரு கத்தி பறிமுதல்
ADDED : செப் 23, 2024 12:10 AM
கோவை: கோவை காட்டூர் போலீசாருக்கு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்டு அருகே வி.கே.கே.மேனன் ரோடு பகுதியில், கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அவர் செல்வபுரத்தை சேர்ந்த ராஜா, 33, என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த அவரது கார் மற்றும் மொபைல் போனையும் பறிமுதல் செய்தனர். வழக்கு பதிந்து ராஜாவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
* இதேபோல சாய்பாபா காலனி போலீசார், வேலாண்டிப்பாளையம் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மரத்தடியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தவரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவரிடம் கஞ்சா மற்றும் கத்தி இருந்தது தெரிந்தது.
விசாரணையில் அவர் பி.என்.புதுாரை சேர்ந்த நசீர், 40, என்பது தெரிய வந்தது.
போலீசார் அவரது வீட்டிலும் சோதனை செய்து மொபைல் போன் மற்றும், 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வழக்கு பதிந்து நசீரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது வேறு ஏதாவது வழக்குகள் உள்ளதா, கத்தி எதற்காக வைத்திருந்தார், இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என விசாரித்து வருகின்றனர்.